சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய 241 மில்லியன் ரூபா பெறுமதியான சிவப்பு சீனி

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சீனி கையிருப்பின் பெறுமதி சுமார் 241 மில்லியன் ரூபா எனவும், குறித்த சீனி கையிருப்பு பறிமுதல் செய்யப்படவுள்ளது.

சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் வெள்ளை சீனி என்ற போர்வையில் சீனி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1,200 மெட்ரிக் டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதில் 600 மெட்ரிக் டன் சிவப்பு சர்க்கரை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Previous articleஇலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்! ஜனாதிபதி தெரிவிப்பு
Next articleதமிழர் பகுதியில் 25 வீத இராணுவக் குறைப்பு கோரிக்கை! அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம்!