சந்திரிக்கா தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

டொரிங்டனில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, லசந்த அஜயவண்ண ஆகியோர் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleபட்டத்தாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல் !
Next articleசூரியனின் காணொளியை வெளியிட்ட நாசா