நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பதிவாகும் வீதம் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக உடலியல் நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோயாளிகள் உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என சங்கத்தின் உப தலைவர் தென் கொழும்பு போதனா வைத்தியசாலையின் உடலியல் நிபுணர் நந்தன திக்மதுகொட கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Previous articleமஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!
Next articleநாளைய தினத்திற்கான மின்வெட்டு வெளியீடு