மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதிவான் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு காலியில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மஹிந்த தரப்பு சட்டத்தரணியினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அதனை கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் திலின கமகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

Previous articleகோட்டாபய, மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கனடா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிரடித் தடை
Next articleநாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பதிவாகும் வீதம் அதிகரிப்பு