வவுனியவில் போதைப் பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் பலி !

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் வசிக்கும் 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையொருவர் போதைக்கு அடிமையாகி புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மீதான வழக்கை விசாரித்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி புனர்வாழ்வுக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரி அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது, ​​ஐஸ் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக நுரையீரல் மற்றும் உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் 100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கவுள்ள மைதானம் !
Next articleயாழில் இந்திய மீனவர்களுக்கு எதிராக இடம்பெற்ற மாபெரும் மக்கள் ஆரப்பாட்டம் !