முல்லைத்தீவில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்த பாடசாலை மாணவர்கள் !வெளியான காரணம் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த இரண்டரை வருடங்களாக நிரந்தர அதிபர் இல்லாத நிலையில் நிரந்தர அதிபரை நியமிக்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், “தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்”, “எங்கள் பாடசாலை அதிபர் எங்கே”, “உயர்தர பாடசாலை அதிபர் தேவை”, “துணுகை கல்வி வலயம் 1ஏபி பாடசாலையே” போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் இல்லாமல்”, “அருகில் மண்டலம் அனாதை பள்ளி”.

அதேநேரம் சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிசார் மாணவர்களிடம் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதற்கான தீர்வுக்கு ஆவண செய்வதாகவும் உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் கலைந்து சென்று கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 18/01/2023
Next articleஇன்றைய மினவெட்டு நேரம் குறித்து வெளியான முக்கிய அறிவப்பு !