லக்ஷ்மன் கிரியெல்ல தனது தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக விஜயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக நீதியமைச்சர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று குற்றம்சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் தம்முடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தம்மை விமர்சித்ததாக கிரியெல்ல தெரிவித்த கருத்து தொடர்பிலேயே விஜயதாச ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

இது ஒரு தீவிரமான பிரச்சினை என்று குறிப்பிட்ட அவர், தமது தொலைபேசி உரையாடல்களை அவர் ஒட்டுக்கேட்டு கொண்டிருக்கிறார் என்று குற்றம் சுமத்தினார்.

தனக்கு எதிராக சேறு பூசும் பிரசாரத்தில் லச்மன் கிரியெல்ல ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறைகூறினார்.

இந்தநிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சருடன் தொடர்கொண்டமை எப்படி தெரியவந்தது என்று, சபாநாயகர், லச்மன் கிரியெல்லவிடம் கேட்டபோது, லச்மன் கிரியெல்ல, அதற்கு பதிலளிக்கவில்லை.

Previous articleஉலகின் மிக வயதான நபர் காலமானார்
Next articleகொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சந்தேகநபரின் வாக்குமூலம்