குளிருடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வானிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படும் அதே வேளை குளிருடன் காணப்படும்

அத்துடன் ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் கானபப்டுகின்றது!

ஆகையால் சில இடங்களில்  75 மில்லி மீற்றர் அளவிலான மழை பெய்யக் கூடும் எனவும் அத்துடன் நாட்டின் மற்றைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளை பலத்த காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

Previous articleஈஸ்டர் தாக்குல் வழக்கில் நஷ்ட ஈடு செலுத்த மக்களின் உதவியை வேண்டி நிற்கும் மைத்ரிபால சிறிசேன!
Next articleஅரச பணியாளர்கள் பலரை பணி நீக்க திட்டம்!