ஈஸ்டர் தாக்குல் வழக்கில் நஷ்ட ஈடு செலுத்த மக்களின் உதவியை வேண்டி நிற்கும் மைத்ரிபால சிறிசேன!

ஈஸ்டர் வழக்குத் தீர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு 10 கோடி ரூபா நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் தன்னிடம் 10 கோடி ரூபா நஷ்ட ஈடு செலுத்துமளவிற்கு பணம் இல்லையெனவும் மக்கள் உதவி செய்தால் மாத்திரமே என்னால் அவ்வளவு தொகையை செலுத்த இயலும் எனவும் இல்லையெனின் நான் சிறைக்கு தான் செல்ல வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்னிடம் என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இல்லை அத்துடன் எனது சகோதரர்  டட்லி சிறிசேனவின் வர்த்தக நடவடிக்கைகளில் எனக்கு தொடர்பு இல்லை மக்கள் உதவி செய்தால் மட்டும் இதிலிருந்து நான் காப்பாற்றப்படுவேன் என கூறியுள்ளார்