வட்டி விகிதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 6 மாதங்களில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு திட்டம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என இந்தியா ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சீனாவின் எக்ஸிம் வங்கி தனது கடனை செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதாக கடிதம் மூலம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு சீனா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளது. 

Previous article18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலி! ரஷ்யா-உக்ரைன் போர்: ஐ.நா அதிர்ச்சி தகவல்
Next articleஅனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம் – நிதி இராஜாங்க அமைச்சர்