மருந்து தட்டுப்பாடு குறித்து WHO காரியாலயத்தில் முறைப்பாடு

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (26) முற்பகல் குறித்த முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கறுப்பு வாரத்துடன் இணைந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

Previous articleஅரச வங்கியொன்றிலிருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான தங்க நகைகள் மாயம்!
Next articleஏலத்தில் விடப்படும் ஜெயலலிதாவின் சொத்துக்கள்!