நீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு !

பெலவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் நீச்சல் குளத்தில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க என்ற 49 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த 30ஆம் திகதி முதல் காணவில்லை என வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் நேற்று (01) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மர்ம மரணம் தொடர்பான மரண விசாரணையை நீதவான் முன்னெடுத்திருந்ததோடு, நுகேகொட சிஐடியும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலங்கம பொலிஸ் நிலையப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் அனுருத்தவின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Previous articleயாழில் இரவு உணவு உட்கொள்ள சென்ற இளைஞனுக்கு இடம்பெற்ற சோகம் ! சோகத்தில் குடும்பத்தினர் !
Next articleசுதந்திரதின நிகழ்வை புறக்கணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச