மட்டக்களப்பில் சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு ஒன்று கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

அறிவிப்பாளரும், பி.பி.கொம்.பட்டதாரியும், தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியருமான களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மாணவர்களான த.சஜித்தன் வயது (16) ச.தனு வயது (16) வீ.விதுசன் வயது (16) என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

களுவுந்தன்வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பொதுத்தர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவிகளும் ஆசிரியர் ஒருவருமாக 8 பேர்கள் ஒன்றிணைந்து தாந்தாமலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த தோணி கவிழ்ந்ததினால் இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இறந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அத்துடன் சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  100 ரூபா நெல் கொள்வனவிற்கு இணக்கம் தெரிவித்தார் ஜனாதிபதி
Next articleவீட்டினுள் உறங்கிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!