நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!

2022 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்கான முன் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு ஜனவரி 23ஆம் திகதி முதல் ஜனவரி 17ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் திங்கட்கிழமை ஆரம்பமாகி மார்ச் 24ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதிக் கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24ஆம் திகதி நிறைவடையும்.

இந்த வருடத்தின் முதலாம் தவணை ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.