QR முறைமையிலான எரி பொருள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

எதிர்காலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள  QR முறை ஒழிக்கப்படும் அதேவேளை பெற்றோலின் விலையிலும் சிறிதளவில் அதிகரிக்கப்படலாம் எனினும் தற்போது அவ்வாறான நடவடிக்கைகள் இல்லை என எரி சக்தி மற்றும் மின் சக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உக்ரைன் ரஷ்ய யுத்தத்தால் தான் பெற்றோல் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாகவும் இவ்வாறான நிலையில் பெற்றோல் எவ்வளவு குறைவடையும் கூடும் என கூற முடியாது அவ்வாறு விலை அதிகரிப்பதாக இருந்தால் 10 – 15 ரூபா வரையில் மாற்றம் ஏற்படலாம்.’

மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள்  QR முறைமை முற்றாக ஒழிக்கப்படும் அதன் பின்னர் மக்கள் வழமைபோன்று பெற்றோலனை இலகுவாக பெற்றுக்கொள்ள இயலும் என குறிப்பிட்டுள்ளார்