தமிழர் பகுதியில் வீட்டொன்றினுள் புதையல் தேண்டிய மூவர் கைது !

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91 ஆம் கட்டை ஜன் சவி மாவத்தை பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வீட்டின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் இருந்து மூன்று கருவிகள், மண்வெட்டி, ஒரு சுத்தியல், ஒரு பிளாஸ்டிக் வாளி, ஒரு கயிறு, ஒரு தண்ணீர் பம்ப் மற்றும் பல கம்பி ஆகியவையும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleமேக்கப் போட்டதால் வந்த வினை – மணமகளுக்கு முகம் வீங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் !
Next articleதிரைப்பட பாணியில் பிடிக்கப்பட்ட திருடி ! பொதுமக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் !