கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து ! படுகாயமடைந்த நால்வர் !

கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயாஸ் வாகனம் பூநகரி நல்லூர் பகுதியில் மேற்படி பகுதியை வரவேற்கும் சீமெந்தினால் ஆன வளைவில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் வருகை தந்த போது, ​​சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால் காயமடைந்தவர்களை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வைத்தியரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் காட்சிகளை அவதானிக்க முடிந்தது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
Next articleசற்றுமுன் முல்லைத்தீவு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அரச பேருந்துகள் !