இலங்கையில் காதலனுடன் இணைந்து குற்றச் செயலில் ஈடுபட்ட பெண்

இலங்கையின் பொரளை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட  28 வயதினையுடைய யுவதி ஒருவரின் வீடு ஒன்று நேற்றைய தினம் பறிமுதல் செய்யபட்டுள்ளது

அத்தோடு அவரது கணக்கில் உள்ள 2 கோடி ரூபாயும், காதலன் கணக்கில் இருந்த 8 கோடி ரூபாயும், குறித்து குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.குறித்த இரு நபர்களும்  2021 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 2 சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வேளை அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 225 கிராம் ஹெரோயின் மற்றும் 868,900 ரூபாய் பணமும் பெறப்பட்டது  அத்தோடு மிரிஹான ரஜமஹா விஹார மாவத்தையை சேர்ந்த தினேஷ் ஹர்ஷ ரணசிங்க மற்றும் அவரது காதலி என கூறப்படும் பொரளை சர்ப்பன் வீதியை சேர்ந்த அருணி நடிஷிகா ஆகியோரிடம்  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன

விசாரணைகளில் , 2021 ஜனவரி 06 ஆம் திகதி வெலிவேரிய, கிரிக்கித்த பிரதேசத்தில் வீடுடன் கூடிய காணியொன்றை 5,700,000 ரூபாவிற்கு அருணி கொள்வனவு செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது மட்டுமன்றி சந்தேக நபரின் பெயரில் பல வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள சுமார் 2 கோடி ரூபாயும், சந்தேக நபரின் காதலனின் பெயரில் வங்கிக் கணக்குகளில் சுமார் 8 கோடி ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த காணி மற்றும் வீட்டை கொள்வனவு செய்வதற்கு சந்தேகநபர் எவ்வாறு பணம் சம்பாதித்தார் என்பதை நிரூபிக்க தவறியதன் பின்னர் , பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மஹர பிரதேச செயலாளர் இந்த வீட்டின் பெறுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 வயதுடைய பெண் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வெலிவேரிய பகுதியில் அவர் வாங்கியதாக கூறப்படும் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.