இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவுகள் இடைநிறுத்தம்

கராத்தே தோ விளையாட்டிற்கான தேசிய சங்கமான இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி, சங்கத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக தொடர்வதற்கு 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் தேர்தலுக்காக விசேட பொதுக்கூட்டத்தை கூட்டி அலுவலக தேர்தல் குழுவொன்றை நியமிப்பதற்கு,
 தேர்தலை அழைப்பதும் மற்றும் நடாத்துவதும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் மேற்கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleநாட்டு மக்களுக்கான அவசர அறிவிப்பு!
Next articleஎந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயார் -எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச