மது போதையில் நிர்வாணமாக அட்டகாசம் புரிந்த நபரால் பரபரப்பு!

ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தலைவர் விதானகே சிறிசோமவின் வீட்டுக்கு  மதுபோதையில் நிர்வாணமாக இரும்புக் கம்பியுடன் சென்ற நபர் குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்படுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.   

நேற்று (20) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் முன்னாள் மேயரின் மகள் மற்றும் சகோதரி ஆகியோரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்த பல பொருட்களும், வாயில்களும் சேதமடைந்துள்ளன. வீட்டில் காணப்பட்ட வளர்ப்பு நாயையும் இந்த நபர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

சந்தேக நபர் மாநகர சபையில் வேலைக்காக முன்னாள் மேயரால் பணிக்கு அமர்த்தப்பட்டவர் என்றும் அங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்கு பழிவாங்கும் நோக்கில் அவர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீதியில் நிர்வாணமாக நடந்து செல்வதை நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக ஹொரணை பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன், அவர் இன்று (21) ஹொரணை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous articleபெண்களை ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!
Next articleமது அருந்தி விட்டு பாடசாலை சென்ற மாணவி!