பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள புகையிரத இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு புகையிரத இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் புகையிரத அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை தர அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்தக் கோரி நீண்ட நாள் கோரிக்கை விடுத்து 5 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில் நல்ல பதில் கிடைக்காததால் இன்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தை அமுல்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநல்லூர் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மாம்பழ திருவிழா
Next articleவெளிநாடொன்றில் மனைவியை கொன்ற கணவன்