வெளிநாட்டவர்களுக்கு எந்தவொரு நிலமும் இனி விற்கப்படமாட்டாது

அரசாங்கம், ஷங்ரிலா ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு காலி முகத்திடல் நிலத்தை விற்பனை செய்ததன் பின்னர் எந்தவொரு நிலத்தையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மாணித்துள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஆரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும், அரசாங்க Nலைத்திட்டங்களுக்காக எந்த நிலமும் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர், பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், எந்த நேரத்திலும், புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பெந்தோட்டை, ஹிக்கடுவ, அனுராதபுரம் போன்ற எந்தவொரு புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலும் புகையிரத நகரம் ஒன்றை (Station Plaza) அமைக்க முதலீட்டாளர்கள் முன்மொழிந்தால், அந்தப் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்று, அதனை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் கையாள்வதற்காக குழுவொன்றை நியமிப்பேன் என தெரிவித்தார்.

அத்துடன், முதலீடுகளைப் பெறுவது மிகவும் முக்கியம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டில் காணிகளை வைத்துக் கொண்டு அதனூடாக வருமானத்தை ஈட்டாவிட்டால், நாட்டின் பொருளாதாரப் பொறிமுறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும் அமைச்சர் மேலும் வினவினார்.