1,000 ரூபா வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா வழங்குவதாக வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலைகளை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளாந்தம் ஆயிரம் ரூபா கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் ஆரம்பித்து நீண்ட நாட்களாகிவிட்டது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.