மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

8 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

திறைசேரி

அமைச்சரவையின் அங்கீகாரமும், திறைசேரியின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.