அடுத்த மாதம் முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் நடைமுறை!

இலங்கையில் மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது அது தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தரத்தை உறுதிப்படுத்தும் பணி

சர்வதேச சந்தையில் இலங்கையின் மசாலாப் பொருட்களுக்கு அதிக கிராக்கி காணப்பட்டாலும், இதுவரையில் எமது நாட்டில் மசாலாப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான பணி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மசாலா ஏற்றுமதியாளர்கள் அந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மசாலா பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினரின் மசாலா பொருட்களுக்கான தர உத்தரவாத திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர மசாலா மற்றும் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபைக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையிலுள்ள அனைத்து சிறிய மற்றும் நடுத்தர மசாலா உற்பத்தியாளர்களும் இந்த தரச்சான்றிதழை பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேற்படி கூட்டுத்தாபனத்தின் தலைவர் குமுதினி ஆர்ய குணசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சான்றிதழ் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழாக இருப்பதால், இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மசாலா உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களை சர்வதேச சந்தைக்கு எவ்வித தடையுமின்றி ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.