வற்வரி அதிகரிப்பால் இலங்கையில் ஏற்ப்பட்ப்போகும் நெருக்கடிகள்!

வற் வரி அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளினால் நாட்டில் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைரவ் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் நெருக்கடி நிலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வற் வரி மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும். இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம்.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத குடும்பங்கள் காரணமாக தற்கொலை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

தற்போதைய அரசாங்கம் மக்களின் அவலத்தை மேலும் கூட்டி வருவதுடன், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய வற் வரியை நடைமுறைப்படுத்துவது அத்தகைய நடவடிக்கையில் ஒன்றாகும்.

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு வற் வரியை அதிகரிப்பது மாத்திரம் தீர்வு அல்ல, நாட்டில் இருந்து திருடப்பட்ட பணம் மீள நாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் திருடர்களை நம்பி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டமையினால் இதனைச் செய்ய முடியாதுள்ளது.

திருடர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.