ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரில் இன்று முற்பகல் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.