மரபணு மாற்றமடைந்த கொவிட் திரிபுடன் 14 பேர் அடையாளம்!

மரபணு மாற்றமடைந்த கொவிட் திரிபுகள் கொண்டதாக சந்தேகிக்கப்படும் 14 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பெற்றுக்கொண்ட 25 எழுமாறான மாதிரிகளில், மரபணு மாற்றமடைந்த கொவிட் திரிபுகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாலைதீவு பிரஜை ஒருவர் உட்பட 19 பேர் இந்தியாவின் கொடிய ‘டெல்டா’ வைரஸ் தொற்றாளர்களாக கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.