தனியார் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்!

பல தனியார் நீண்ட தூரப் பேருந்துகள் மீது காலி வீதியில் கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்துகம-கொழும்பு, களுத்துறை-கொழும்பு, அளுத்கம-கொழும்பு மற்றும் அம்பலாங்கொட-கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினரால் சாதாரண கட்டணத்தின் கீழ் நீண்ட தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் பேருந்துகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , கைதானவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous articleகொரோனா தொடர்பில் பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்…..!
Next articleயாழில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!