இந்தியாவிடம் கடன் வாங்கிய இலங்கை எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் மக்கள்…!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைச் சந்தித்து பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்தியாவின் வலுலான ஆதரவை வெளிப்படுத்தினார்.

இந்திய ரிசர்வ் வங்கியினால் கடந்த வாரம் 900 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது. ஆசிய கணக்குதீர்வக ஒன்றிய கொடுப்பனவான 500மில்லியன் அமெரிக்க டொலர் ஒத்திவைப்பு மற்றும் 400மில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் ஆகிய நிவாரணங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கியது.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக இணைந்திருக்கும் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டிற்கிணங்க இந்த உதவிகள் அமைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.