சுவிஸில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு….!


சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான வேலணை, புளியங்கூடலுக்கு சென்ற நிலையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரவு சாப்பிட்டுவிட்டு நித்திரைக்கு சென்றவர் நேற் முன்தினம் காலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான நல்லையா திருவருட்செல்வன் வயது 57 என்ற இளம் குடும்பத்தரே உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Previous articleகணவரால் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த நிலை….!
Next articleயாழ். பல்கலை கழக மாணவிகள் இடையில் மோதல்….!