மட்டக்களப்பில் அதிபர் கொடூரமாக படுகொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்…..!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனையில் உயிரிழந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததையடுத்து சடலத்தின் உடற் கூறுகள் அரச பகுப்பாய்வுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 04ம் திகதி திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குறித்த சடலம் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான பாடசாலை அதிபர் செபநாயகம் மங்களச்சந்திரா( 53 ) என அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை சகோதரியிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மங்களச்சந்திராவை அவரது மகனும் மகனின் நண்பன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும் சேர்ந்து மருத்துவமுறையில் படுகொலை செய்து உடலை திராய்மடுவில் வீசியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous articleகமல் பட நடிகர் ”பீம் பாய்” : மகாபாரத “பீமன்” காலமானார்…!
Next articleகடவுள்களாக தெரிந்த தீயணைப்பு வீரர்கள்… தீ விபத்தில் தப்பிய ஸ்ரீயின் திக் திக் நிமிடங்கள்!