மட்டக்களப்பில் உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்
மட்டக்களப்பு – துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும் இளம் ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில் பல வருட காலமாகக் கட்டுரைகள், அரசியல் வாதிகளின் பேட்டிகள், கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

பல்துறைக்கலைஞரான இவருக்குக் கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தினால் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியை இன்று பிற்பகல் 3.00மணியளவில் துறைநீலாவணை பொது மயானத்தில் நடைபெறும்.

அன்னாரின் மறைவு கவலைக்குரியது. அவரின் இழப்பானது கிழக்கு மாகாண ஊடகத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

Previous articleநாளை மின்தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Next articleஇலங்கையின் துறைமுகத்தை சீனா கைப்பற்றியது என அம்பலப்படுத்திய அவுஸ்திரேலியா