கோட்டா எமக்கு வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுஎமக்கு கோட்டா வேண்டும் (We Want Gota) என்று எழுதப்பட்ட பதாகைளை ஏந்தியவாறு சிலர் நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 22 பேர் மாத்திரமே கலந்துக்கொண்டுள்ளனர்.

அங்கு கருத்து வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டகாரர்கள், நாட்டில் தற்போது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் ஒரு ஏமாற்று நடவடிக்கை எனவும் எதிர்வரும் மே முதலாம் திகதி 69 லட்சம் மக்களையும் வீதியில் இறக்க போவதாகவும் கூறியுள்ளனர்.

கோட்டா வீட்டுக்கு சென்றால் மாற்று யார், நான் 69 லட்சம் மக்களில் ஒருவன், எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு போன்ற வாசகங்கள் எழுப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தி இருந்தனர். 

Previous articleஇலங்கையின் பிரபல விமான சேவைக்கு வந்த சிக்கல்!
Next articleபொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு : குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை!