காலிமுகத் திடலில் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்

இலங்கையின் பிரபல இலத்திரனியல் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளரான விந்தன பிரசாத் கருணாரத்னவை காலிமுகத் திடலில் வைத்து இனந்தெரியாத சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

தாக்குதலை நடத்தியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்ல எனவும் போராட்டத்துடன் சம்பந்தமில்லாத சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் இலத்திரனியல் ஊடகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விந்தன பிரசாத் கருணாரத்ன அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பான செய்திகளை நேரடியாக களத்தில் இருந்து வழங்கி வந்துள்ளார்.

மிரிஹானவில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்றிருந்த அவர், ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் தடையேற்படுத்தியமைக்கு எதிராக குரல் கொடுத்தாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Previous articleஇனி வரும் காலங்களில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதை நிறுத்துங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Next articleயாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த 3 வயது சிறுவன்