நாளை மின்வெட்டுத்தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு தொடர்பிலான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (14) ஐந்து மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது தற்போதைய மின்சார நெருக்கடி தொடர்பில் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில்,

அடுத்த சில வாரங்களில் இலங்கையில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், மின்வெட்டு காலம் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது !
Next articleஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான அறிவிப்பு