மாத்தறையில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி மாயம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாத்தறை – வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம சுமங்கலா பாலிகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் ஜனிஷா இமய காவிந்தி என்ற 16 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி முதல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி காணாமல் போயுள்ளதாக வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் காணாமல் போன சிறுமியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு இரண்டு பிள்ளைகள், மூத்த மகளுக்கு 16 வயது, இளைய மகனுக்கு மூன்றரை வயது. மகள் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தாள். கடந்த 3ம் தேதி முதல் மகளை காணவில்லை.

அன்று நாங்கள் வெளியில் சென்றபோது எங்கள் மகள் வீட்டில் இல்லை. என் மகளைப் பற்றிய செய்தி கிடைக்காத இடமெல்லாம் தேடிப்பார்த்தேன். பின்னர் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தேன்.

எனது மகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மற்ற மாணவர்களைக் கண்டால் எனக்கு கவலையாக இருக்கின்றது.

ஏனென்றால் என் மகள் மிகவும் கடினமாக உழைத்தார். தேர்வில் தேர்ச்சி பெறுவாள் என்று நம்பியிருந்தோம். என்னால் இதனை கற்பனை செய்ய முடியவில்லை. எனது மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் வெலிகம பொலிஸாருக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தெரிவிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகாதலி என எண்ணி இந்திய இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளிகளிடம் தெரிவித்த இந்திய இராணுவர்
Next articleபுயலின் காரணமாக கனேடிய தலைநகரம் மேலும் 4 நாட்கள் இருளில் மூழ்கும்!