எரிவாயுவின் விலை அதிகரிப்பு? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிவாயுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இவ்வாறான நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை 200 ரூபாயினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோவின் விலை லாப் நிறுவனத்தின் விலையை போல அதிகரிக்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், சமீபத்தில் அந்த நிறுவனம் விலையை மிகவும் ஆபத்தான விதத்தில் அதிகரித்தது போல நாங்கள் அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleபலாலி விமான நிலையம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleயாழில் பொய் கூறி எரிபொருள் நிரப்ப முயன்ற சட்டத்தரணி : கொந்தளித்த பொதுமக்கள்!