மிக்ஸ் பாக்சின்கில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளத்தைச் சேர்ந்த பெண்!

இந்தியாவில் இடம்பெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்புகலைப்போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தைச் சேர்ந்த பெண்ணை அப்பகுதி மக்கள் கௌரவித்துள்ளனர்.

கடந்த 27ம் திகதி அன்று நடைபெற்ற இப்போட்டியில் கலந்ததையடுத்து நேற்றையதினம் சொந்த ஊருக்கு வருகை தந்ததையடுத்து இந்த கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தங்கம் வென்றவர் மாங்குளத்தை செர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதா எனும் பெண் ஆவார்.

இந்த கௌரவிப்பு நிகழ்வானது மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Previous articleயாழில் காலில் முள் குத்தியதால் இளைஞன் ஒருவர் பலி!
Next articleசட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த நபரை மாறுவேடத்தில் சென்று கைது செய்த பொலிஸார்!