கொழும்பில் திடீரொன வெடித்த ஆர்ப்பாட்டம் : ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள்!

நாட்டின் அசாதாரன சூழ்நிலைக்கு காரணமான பிரதம்ர் ரணில் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை உடனடியாக பதவி விலக கோரி கொழும்பில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டமானது சற்றுமுன் களனியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுத்த இப்பேரணியானது கோட்டை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த மாணவர்கள் இரவு கோட்டையில் தங்கிவிட்டு நாளை நாடளவிய ரீதியில் இடம்பெற்ப்போகும் ஆரப்பாட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாளை இலங்கை முழுவதும் இருந்து அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleநாளை அனைத்து தனியார் பேருந்துகளும் இயங்காது : வெளியான காரணம்!
Next articleபாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கோட்டாபய : வெளியான தகவல்!