பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கோட்டாபய : வெளியான தகவல்!

நாட்டின் ஜனாதிபதியான கோட்டாபய இராஜபக்ச அவரின் ஜனாதிபதி மாளிகையில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார சிக்கல்க்கு காரணமான பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை பதவியில் இருந்து விலகக்கோரி நாளை பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளப்போவதாக வெளிவந்த செய்தியையடுத்து ஜனாதிபதி பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் நாளை இடம்பெறப்போகும் மக்கள் போராட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு சத்தியாகிரகப்புாராட்டத்தில் ஈடுபட போவதாக உளவுத்துறையினருக்கு இரகசியத்தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறான தகவல்கள் கிடைத்ததன் பிறகே ஜனாதிபதி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ராஜபக்சவின் மூத்த புதல்வர் ஆன நாமல் ராஜபக்ச தனது மனைவி மற்றும் குழந்தையை ரகசியமாக வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகொழும்பில் திடீரொன வெடித்த ஆர்ப்பாட்டம் : ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள்!
Next articleயாழில் பேருந்தின் மிதிப்பலகை உடைந்ததில் ஒருவருக்கு நேர்ந்த நிலை !