ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் ஆயிரக்காண போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியுள்ளதுடன், வீதித்தடைகளை அமைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ள போதும் அவற்றை தகர்த்து எறியும் முயற்சியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleயாழில் ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி!
Next articleவீதித்தடைகளை உடைத்து முன்னேறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் : பாதுகாப்பான இடத்திற்கு சென்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதி!