கொராணா தொற்று அதிகரித்தால் பாடசாலை இயங்குமா ? பதிலளித்த கல்வி அமைச்சர் !

நாட்டில் மீண்டும் கொரணா தொற்று அதிகரித்தாலும் பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் மாணவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் பலகிய மாணவர்களை தனிமைப்படுத்துவமே தவிற பாடசாலைக்கு விடுமுறை அளிக்கமாட்டோம். என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொராணா தொற்று அதிகரித்து வரும் இக்காலத்தில் பாடசாலை நடத்தும் விதம் தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என்றும் இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியும் , உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.