திடீரென அதிகரித்த முட்டையின் விலை ! ஆட்சியில் இல்லை என்றாலும் திருவிளையாடல் தொடர்கிறது!

கோழிப்பண்ணைகளுக்கு வருகை தரும் மொத்த வியாபாரிகளுக்கு ஒரு முட்டையை ரூ.46/-க்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக முட்டை விற்பனை குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வர்த்தமானியில் திருத்தம் செய்யப்படும் வரை முட்டை உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Previous articleஇலங்கைக்குள் தஞ்சம் அளிக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் மனு அணுப்பிய நித்தியாணந்தா!
Next articleகிளிநொச்சியில் உறக்கத்தில் இருந்த கணவருக்கு மனைவியால் நேர்ந்த கதி; இருவரும் மருத்துவமனையில்!