வெளிநாட்டில் இருந்துவந்த மனைவி தாயார் வீட்டில் தங்கியதால் ஏற்பட்ட விபரீதம்!

தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி நேற்று (04) இரவு உயிரிழந்துள்ளார்.

மனைவி தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வெளிநாட்டில் இருந்ததாகவும், ஆகஸ்ட் 31 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி தனது தாயுடன் வசித்து வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீண்டகால குடும்ப தகராறு காரணமாக சந்தேக நபர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்தவர் தம்புள்ளை, கொட்டவெல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை!
Next articleபிரான்ஸிலிருந்து யாழிற்கு வந்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!