மின் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து விடுபட வேண்டுமாயின் எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் நாடு முழுவதிலும் இருந்து வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் ஜனக ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்கட்டண உயர்வைக் குறை கூறாமல் முடிந்தவரை மின்கட்டணத்தைச் செலுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Previous articleமன்னாரை உலுக்கிய கொடூர சம்பவம் தொடர்பில்: சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி!
Next articleஇலங்கை அணியை போன்று அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றிபெறலாம்! – ஜனாதிபதி