வவுனியாவில் இரவுவேளை பரவிய தீ : எரிந்து சாம்பலான பொருட்கள்!

வவுனியாவில் திடீரென பரவிய தீயில் தீயினால் தொலைபேசி வயரிங் அமைப்பும் மரங்களும் எரிந்து சாம்பளாகின.

இச்சம்பவமானது நேற்று வவுனியா – இரட்டைபெரியகுளம் நுவர பிரதான வீதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்த தீயினால் தொலைபேசி வயரிங் அமைப்பும், வீதியோரங்களில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் நடப்பட்டிருந்த பல மரங்களும் எரிந்து நாசமாகின.

குறித்த வீதியில் பயணித்த ஒருவர் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டை பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : வெளியான காரணம்!
Next articleபோதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!