எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் !

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி நிர்வாகத்தை மாற்றுவது முதல் வகையாக அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்த அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் ஐந்து முதல் பத்து வருடங்கள் எடுக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கு தேவையான நிதியை ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அதன்படி, நான்கு ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும்.

அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.