யாழினை சேர்ந்த 43 பேர் ஒரே ஹோட்டல் ஒன்றில் கைது : வெளியான காரணம்!

உனவடுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று (23-10-2022) கைது செய்யப்பட்டதாக ஹபரதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

இந்த 43 பேரும் யாழ். மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், அவர்களில் 33 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மாத காலமாக வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்த குழுவினர் நேற்று 5 நாள் சுற்றுலா செல்வதாக கூறி வவுனியாவில் இருந்து காலி உனவடுன நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

Previous articleபல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் தந்தை வெளியிட்ட தகவல் !
Next articleசற்றுமுன் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞர்!