இலங்கையிலிருந்து துபாய்க்கு பணிக்காக சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!

வேலை நிமித்தம் துபாய் சென்ற 80 இலங்கை பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அநநாட்டு தூதரகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார பணியகத்திற்கு தகவல் அளித்துள்ளது.

குறித்த பெண்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக துபாய்க்கு வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள டுபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். . எஞ்சியவர்கள் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக டுபாயில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி நளிந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துபாய்க்கு வேலைக்காக சென்றவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு டுபாயில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

Previous articleகால்வாயில் தவறி விழுந்து பலியான நபர்!
Next articleயாழ் நாவற்குழி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!